ஏற்றுமதி விழிப்பு உணர்வு! | Editor Opinion - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/04/2019)

ஏற்றுமதி விழிப்பு உணர்வு!

னைவருக்கும் பசுமை வணக்கம்!

‘தி
ரைகடல் ஓடி திரவியம் தேடு’ என்றார் தமிழ் மூதாட்டி ஔவையார். சங்ககாலத்துக்கும் முன்பிருந்தே தமிழ் மண்ணிலிருந்து வெளிநாடுகளுக்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கு விளையும் ஏலக்காய், மிளகு... போன்ற வாசனைப் பொருள்களை வாங்கிச் செல்லத்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்பது வரலாறு. இப்போது இந்தியாவிலிருந்து 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் 25 நாடுகள் ஏற்றுமதிக்கு உகந்தவை என்று ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்புப் பரிந்துரைக்கிறது.

உலக அளவில் இந்தியாதான் காய்கறி உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பால் உற்பத்தியில் முதலிடம். இத்தனை சிறப்புகள் இருந்தாலும், ஏற்றுமதி விஷயத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேகம் ஏற்படவில்லை. அதனால்தான், ‘வேளாண் ஏற்றுமதி கொள்கை-2018’ மூலம், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் வேளாண் ஏற்றுமதியை இரண்டு மடங்காக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, 60 பில்லியன் டாலருக்கு(4.2 லட்சம் கோடி) ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதுதான் இலக்கு. இதை எட்டுவதற்கு அபீடா, நறுமணப் பொருள்கள் வாரியம் போன்ற அமைப்புகள் மூலம் ஏற்றுமதியாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது.

இத்தகைய சூழலில், ஏற்றுமதியில் உள்ள நுட்பங்கள் மற்றும் நுணுக்கங்கள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகச் சென்னையில் ஏப்ரல் 28-ஆம் தேதி, ‘லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி’ என்ற ஒரு நாள் பயிற்சி வகுப்பை ‘நாணயம் விகடன் மற்றும் ‘பசுமை விகடன்’ இணைந்து நடத்துகின்றன. விவசாயிகள் இதில் திரளாக பங்கேற்று, ஏற்றுமதியாளர்களாக ஏற்றம் அடைய அன்புடன் அழைக்கிறோம்.

-ஆசிரியர்