கடுதாசி: ஆலம்பாடியை அங்கீகரிக்க வேண்டும்! | Readers Feedback letters - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

கடுதாசி: ஆலம்பாடியை அங்கீகரிக்க வேண்டும்!

வாசகர்கள்

நாட்டு மாட்டுச் சாணத்தில் உரம் உற்பத்தி செய்யலாம், பஞ்சகவ்யா தயாரிக்கலாம் என்றுதான், இதுவரை படித்து வந்தோம். இப்போது, நாட்டு மாட்டுச்சாணத்தில் கலைப்பொருள்கள் தயாரிப்பதைப் படித்தபோது வியப்பு ஏற்பட்டது.

- ஆர்.கமலா, துறையூர்.

கோழிகளுக்குக் கடையில் தீவனம் வாங்கிப்போட்டு வளர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எந்த அளவில் தானியங்களைக் கலந்து, தீவனத்தைத் தயாரிப்பது என்று தெரியாமலிருந்தேன். என் மனதில் ஏற்பட்ட கேள்விக்குத் தெளிவான பதில் கிடைத்தது.

- ரா.இராஜசேகரன், வாய்மேடு.

ங்கள் மாவட்டத்திலிருக்கும் நாவினிக்கும்பட்டி காலப்போக்கில் நாவினிப்பட்டியாக மாறிவிட்டது உண்மைதான். முன்பெல்லாம், பொங்கல் கரும்பு இந்த ஊரிலிருந்துதான் மதுரைக்கு வரும். நாவினிப்பட்டி கரும்பு இருக்கிறதா என்று தேடி வாங்கிச் சுவைப்போம்.

- ஏ.குமரன், வாடிப்பட்டி.

ட்டப்பந்தய வீரர்கள்போலத் துடிப்பாக உள்ளன, ஆலம்பாடி மாடுகள். தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ள, இந்தப் பாரம்பர்ய கால்நடை இனத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.

- தி.சிவராமன், ஒடுக்கம்பட்டி.

கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் கொடுப்போம் என்று பல காலமாகச் சொல்லிவருகிறார்கள். ஆனால், நடைமுறைக்கு வந்ததுபோலத் தெரியவில்லை. வாயில்லா ஜீவன்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை அவசியம்.
-அ.கந்தசாமி,வேட்டைக்காரன்புதூர்.


திரும்பத் திரும்பப் படித்தேன்!

‘ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்!’ பகுதி பயனுள்ள தகவல்களைத் தந்தன.

- கே.ராமு, புதுச்சேரி.

ந்தப் பகுதியில் வெளியான, மா சாகுபடி நுட்பங்களைத் திரும்பத் திரும்பப் படித்தேன். மாவில் பூக்கும் நேரத்தில் பாசனம் செய்தால், பூக்கள் கொட்டிவிடும் என்ற நுட்பம் பரம்பரை விவசாயிகளுக்குத் தெரியும். ஆனால், என்னைப் போன்ற பட்டணத்து விவசாயிகளுக்கு நிச்சயம் தெரியாது.

- எஸ்.ஜெகன்,கோயம்புத்தூர்.

க்காளி நல்ல விலைக்கு விற்பனையாகும் நேரத்தில், தண்டுப்பகுதி பாதித்து, விளைச்சல் குறையத்தொடங்கியது. இந்தத் தாக்குதலை இயற்கை முறையில் எதிர்கொள்ளும் வழிமுறையைத் தெரிந்துகொண்டோம்.

- எம்.ராதா, ஒட்டன்சத்திரம்.


அன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும், ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்புத் தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க