60 பெட்டைகள்... 8 சேவல்கள்... மாதம் ரூ. 26,000 லாபம்! | High profit Poultry farming by Ariyalur farmer - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

60 பெட்டைகள்... 8 சேவல்கள்... மாதம் ரூ. 26,000 லாபம்!

கால்நடை

றைச்சிக்கான கால்நடை வளர்ப்பில் முக்கிய இடத்தில் இருப்பது, கோழி வளர்ப்பு. கோழி இறைச்சிச் சந்தையில் பிராய்லர் கோழி இறைச்சியே அதிக இடம் பிடித்து இருந்தாலும்... நாட்டுக் கோழிகளுக்கும் தனியாகச் சந்தை வாய்ப்பு இருந்து வருகிறது. இயற்கையாக மேய்ச்சல் முறையில் விட்டு வளர்க்கப்படும் கோழிகளின் இறைச்சிதான் உண்மையில் உடலுக்கு நலம் கொடுக்கக் கூடியவை.

இப்படி வளர்க்கப்படும் கோழிகளுக்குச் சந்தையில் நல்ல விலையும் கிடைத்து வருகிறது. பெரும்பாலானோர், நாட்டுக்கோழிகளைக் கொட்டகைகளில் அடைத்து கம்பெனித் தீவனத்தைக் கொடுத்து வளர்த்து வருகிறார்கள். இப்படி வளர்க்கப்படும் கோழிகளுக்கு விலை கிடைப்பதில்லை. அதே சமயத்தில், மேய்ச்சல் முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து நல்ல வருமானம் ஈட்டக் கூடியவர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரைச் சேர்ந்த தங்க.சரவணன்.

‘பசுமை விகடன்’ ஆண்டுச் சிறப்பிதழுக்காக, ஒரு காலைப் பொழுதில் சரவணனைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசினார், சரவணன்.