‘‘இயற்கை விவசாயத்தால் உணவு உற்பத்தி அதிகரிக்காது!’’ - வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ‘பளீர்’ பதில் | Interview with Tamil Nadu Agricultural University vice-chancellor N Kumar - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

‘‘இயற்கை விவசாயத்தால் உணவு உற்பத்தி அதிகரிக்காது!’’ - வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ‘பளீர்’ பதில்

சந்திப்பு

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 13-வது துணைவேந்தராகச் சமீபத்தில் பதவி ஏற்றிருக்கிறார், முனைவர் என்.குமார். ‘பசுமை விகடன்’ ஆண்டுச் சிறப்பிதழுக்காகத் துணைவேந்தர் குமாரைச் சந்தித்துப் பேசினோம். பசுமை விகடனுக்கு அவர் அளித்த பேட்டி இங்கே...

“விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது பருவநிலை மாற்றம்தான். இதனால், வரும் பாதிப்புகளை எப்படித் தவிர்ப்பது?”

“இது உலகளாவிய பிரச்னை. இதற்கான நூறு சதவிகிதத் தீர்வை யாராலும் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. இயற்கையை வெல்ல யாரால் முடியும்? ஆனாலும், இதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமக்கு நெல் உற்பத்திதான் பிரதானம் என்பதால், நெல் விவசாயத்துக்கான பருவநிலைப் பிரச்னைகள் குறித்து, நமது பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் முடிவுகளுக்காகக் காத்திருந்தாலும்... அவ்வப்போது நிலவும் பருவநிலை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தப் பயிர்களைப் பயிரிட்டால் இழப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம் என்று விவசாயிகளுக்கு நாங்கள் வழிகாட்டி வருகிறோம்.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க