ஆண்டுக்கு ரூ. 9,00,000 லாபம்! - ஒப்பற்ற லாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை! | Profitable Integrated organic farming in Vilupuram district - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

ஆண்டுக்கு ரூ. 9,00,000 லாபம்! - ஒப்பற்ற லாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை!

ஒருங்கிணைந்த பண்ணை

“காடுகள்ல இயற்கையாவே எல்லா மரங்களும் கலந்துதான் வளருது. அப்புறம் நாம மட்டும் ஏன் தென்னந்தோப்பு, மாந்தோப்புனு பிரிச்சுப் பிரிச்சுச் சாகுபடி செய்யணும்னு யோசிச்சு... செடிகள், கொடிகள், மரப்பயிர்கள்னு எல்லாத்தையும் கலந்து நடவு செஞ்சிருக்கேன். எல்லாப் பயிர்களும் இங்கே இருக்குறதால, சமத்துவத்துக்காகப் பாடுபட்ட ‘தந்தை பெரியார்’ நினைவா என் தோட்டத்துக்கும் ‘பெரியார் தோட்டம்’னு பேர் வெச்சுட்டேன்” என்று சிலாகித்துச் சொல்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சக்திவேல்.

விழுப்புரம் மாவட்டம், பாக்கம் எனும் கிராமத்தில்தான் இருக்கிறது, சக்திவேலின் தோட்டம். சூரியக் கதிர்கள் மேகங்களுக்கிடையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில் சக்திவேலின் பண்ணைக்குள் நுழைந்தோம். மீன் குட்டைக்குத் தண்ணீர்விட்டுக் கொண்டிருந்த சக்திவேல் இன்முகத்துடன் நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சொந்த ஊர் பாண்டிச்சேரி. தாத்தா, அப்பா எல்லாருமே விவசாயிகள்தான். ‘டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங்’ முடிச்சுட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அடுத்து ‘பில்டிங் கான்ட்ராக்டர்’ தொழில் செஞ்சுட்டுருந்தேன். அதனால, விவசாயத்துப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கலை. சுனாமியால வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்குற வேலைக்காகக் காரைக்கால்ல சில வருஷங்கள் தங்கி இருந்தேன்.