மரப்பயிர்கள்... மதிப்புக்கூட்டல்... அசத்தும் முன்மாதிரி விவசாயி! - வெள்ளை ஈக்களை விரட்டிய களைகள்! | Interview with model organic farmer Dhandapani from coimbatore - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

மரப்பயிர்கள்... மதிப்புக்கூட்டல்... அசத்தும் முன்மாதிரி விவசாயி! - வெள்ளை ஈக்களை விரட்டிய களைகள்!

அனுபவம்

2007-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியன்று கோயம்புத்தூரில் நடந்த ‘பசுமை விகடன் அர்ப்பணிப்பு விழா’வில் கலந்துகொண்ட விவசாயிகளில் ஒருவர், தண்டபாணி. பசுமை விகடன் முதல் இதழ் படித்தவுடனேயே அதன்மீது ஏற்பட்ட ஈர்ப்புக் காரணமாக, படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாறியவர்.

13-ம் ஆண்டுப் பசுமை விகடன் சிறப்பிதழுக்காக... கோயம்புத்தூர் அடுத்த சூலூருக்கு அருகே இருக்கும், ராசிபாளையம் கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் தண்டபாணியைச் சந்தித்துப் பேசினோம்.

மாத வருமானம் தரும் தென்னை, வைப்பு நிதிப் பயிராக விளங்கும் மரங்கள், பால் மற்றும் இடுபொருள் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் நாட்டுப்பசு, அதற்கான தீவனப்புல் வயல், விசாலமான களத்து வாசல் கொண்ட கச்சிதமான பண்ணை வீடு என அம்சமாக இருக்கிறது, இயற்கை விவசாயி தண்டபாணியின் தோட்டம். இவரது செயல்பாடு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.

“பரம்பரையா இந்த ஊர்லதான் இருக்கோம். எனக்கு 66 வயசு ஆச்சு. பள்ளிப்படிப்பை முடிச்சதும் ஒரு மில்லில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை முடிஞ்சு வந்ததும் விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன்.