ஆடுதுறை - 51: குறைவான உரமே போதும்... பூச்சிக்கொல்லி தேவையே இல்லை! | Profitable new rice variety Aduthurai 51 yielding - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

ஆடுதுறை - 51: குறைவான உரமே போதும்... பூச்சிக்கொல்லி தேவையே இல்லை!

மகசூல்

நெல் சாகுபடியில் பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்கொள்வது, விவசாயிகளுக்குப் பெரும் சவாலான விஷயம். குறிப்பாக, சம்பாப் பட்டத்தில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ‘ஆடுதுறை-51’ என்ற நெல் ரகத்தை 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்கிறது. குறைவான அளவு இடுபொருள் மட்டுமே இந்த ரக சாகுபடிக்குப் போதுமானதாக இருப்பதோடு, பூச்சிக்கொல்லிகளும் தேவைப்படுவதில்லை. கடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டாலும்... சில விவசாயிகள் இந்த ரகத்தைச் சோதனை அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர், கும்பகோணம் அருகில் உள்ள கொண்டாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்.