‘பலே’ வருமானம் தரும் பனங்கிழங்கு... | Profitable Palmyra sprout yielding in Virudhunagar district - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/01/2019)

‘பலே’ வருமானம் தரும் பனங்கிழங்கு...

1,50,000 பனங்கொட்டைகள் - 120 நாள்கள் - ரூ. 1,70,000 லாபம்

மிழ்நாட்டின் பாரம்பர்ய அடையாளங்களில் ஒன்று பனைமரம். உச்சி முதல் வேர் வரையிலான அனைத்துப் பகுதிகளும் பலன் தருவதால்தான் பனைமரத்தையும் ‘கற்பகத்தரு’ என்கிறார்கள் மக்கள். இந்தியாவில் உள்ள மொத்தப் பனை மரங்களில் 50 சதவிகித மரங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பனைமரங்களில் 50 சதவிகித மரங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில்தான் உள்ளன.

தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையன்று சூரியக் கடவுளுக்கு வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை, காய்கறிகளுடன் பனங்கிழங்கும் இடம்பெறும். அத்தகைய சிறப்பு வாய்ந்த பனங்கிழங்கைப் பல ஆண்டுகளாக விளைவித்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க