கத்திரி, வெண்டை, தக்காளி... தைப்பட்ட விதைப்பு கவனம்! | Price Forecast of vegetables by TNAU Agritech Port - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

கத்திரி, வெண்டை, தக்காளி... தைப்பட்ட விதைப்பு கவனம்!

முன்னறிவிப்பு

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது, வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம். இம்மையத்தின், ‘விலை முன்னறிவிப்புத் திட்டம்’ மூலமாக, முக்கிய விளைபொருள்களுக்கான விலை நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து, அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

 கடந்த 14 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவிய காய்கறி விலை நிலவரங்களை ஆய்வு செய்து... தைப்பட்டத்தில் பயிரிடப்படும் தக்காளி, கத்திரி, வெண்டை ஆகிய காய்கறிகள் அறுவடைக்கு வரும்போது கிடைக்கும் விலை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது, வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்.