டாம், டிக், ஹாரி... விவசாயம் செய்யும் எந்திரன்கள்! | Robots in Agriculture - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

டாம், டிக், ஹாரி... விவசாயம் செய்யும் எந்திரன்கள்!

தொழில்நுட்பம்

ங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விவசாயி, ஜாமி பட்லர். இவர் 450 ஏக்கர் பரப்பில் கோதுமைச் சாகுபடி செய்து வருகிறார். இவர் தனது பயிரைப் பாதுகாக்கும் வேலைக்காக ‘டாம்’ என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அடுத்த ஆண்டில், ‘டிக்’, ‘ஹாரி’ என இரண்டு பேரை வேலைக்குச் சேர்க்க இருக்கிறார், ஜாமி பட்லர். இந்தப்பணியாளர்கள் மூவரும், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைப்பார்கள். எப்போது என்ன வேலை கொடுத்தாலும் செய்வார்கள். இவர்களை யாரும் கண்காணிக்க வேண்டியதேயில்லை. இட்ட பணிகளை அவர்களாகவே செய்து விடுவதோடு... பண்ணையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் பண்ணை உரிமையாளருக்குத் தெரிவித்து விடுவார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்று யோசிக்கிறீர்களா... ஆச்சர்யமான விஷயம்தான். இவர்கள் மூவரும் பேச மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் ‘ரோபோ’ எனப்படும் எந்திரன்கள். ‘ஃபார்ம் ரோபோ’ (Farm Robot) என்றழைக்கப்படும் இவை, தோட்ட வேலைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள எந்திரன்கள். தற்போது, டாம் என்ற ‘வயல் ரோபோ’வை மட்டும் சோதனை அடிப்படையில் வயலில் வேலை செய்ய வைத்துள்ளனர். பட்லரின் வயலில் உள்ள கோதுமை பயிர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்து வருகிறது, டாம்.

நான்கு சக்கரங்களைக் கொண்டு நகரும் டாம்... ஜி.பி.எஸ், செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வயலை ஒரு வரைபடமாக மாற்றிக்கொண்டு செயல்படுகிறது. வயல் ரோபோ, பயிர்களிடையே ஊர்ந்து சென்று, வளரும் பருவத்தில் உள்ள பயிர்களைப் படம் பிடித்து, தன்னுடைய மூளையாகச் செயல்படும் ‘வில்மா’ எனப்படும் நுண்ணறிவுத் தளத்துக்கு அனுப்பும். வில்மா அந்தப் படங்களை ஆராய்ந்து, களைகள் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை மட்டும் நீக்கச்சொல்லி கட்டளை இடும். இதேபோலப் பூச்சித்தாக்குதலும் கண்காணிக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க