மா, எலுமிச்சை, பப்பாளி, பலா, தென்னை... ஆண்டுக்கு ரூ.38,00,000, ஊடுபயிர் கொடுக்கும் உற்சாக வருமானம்! | High profit intercropping cultivation in Theni - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

மா, எலுமிச்சை, பப்பாளி, பலா, தென்னை... ஆண்டுக்கு ரூ.38,00,000, ஊடுபயிர் கொடுக்கும் உற்சாக வருமானம்!

மரச்சாகுபடி

ழக்கமான பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் விவசாயம் செய்பவர்கள் என்றுமே தோற்பதில்லை. அப்படி விவசாயம் செய்து வெற்றிக் கோட்டைக்குள் நுழைந்தவர்களில் ஒருவர்தான், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவேல் பாண்டியன்.

மாந்தோப்பில் பெரும்பாலும் யாரும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதில்லை. ஆனால், தனது மாந்தோப்பில் பலவிதமான பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்து, அசத்தல் வருமானம் எடுத்து வருகிறார், முத்துவேல் பாண்டியன்.

போடிநாயக்கனூரில் இருந்து அகமலை செல்லும் சாலையில் இருக்கிறது முத்துவேல் பாண்டியனுக்குச் சொந்தமான ‘செல்லையா நேச்சுரல் அக்ரிகல்சுரல் ஃபார்ம்’. வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற முத்துவேல் பாண்டியன், தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இயங்கி வருகிறார். ஒரு காலை வேளையில் முத்துவேல் பாண்டியன் பண்ணைக்குப் பயணமானோம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து வீசிய குளிர் காற்றை அனுபவித்துக்கொண்டே அவரது மாந்தோப்புக்குள் நுழைந்தோம். அதைத் தோப்பு என்று சொல்லக் கூடாது. வனம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு மரங்கள் மண்டியிருந்தன.