உலக உழவு
வெர்ட்டிகல் கார்டன் தொழில்நுட்பம்!
கட்டடத்தின் உள்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ இருக்கும் இடத்தைப் பயன்படுத்தி அதில் குழாய்கள் அல்லது தொட்டிகளில் மண் அல்லாத ஊடகங்களைக் கொண்டு செடிகளை வளர்ப்பதுதான், வெர்ட்டிகல் கார்டன். இத்தொழில்நுட்பம் மூலம் காய்கறிகளையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், இம்முறையில் தோட்டம் அமைக்கச் செயற்கை வெளிச்சம் தேவை என்பதால், மின்சாரச் செலவு அதிகமாகிறது. ஆனாலும் இப்புதிய தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தியை அதிகரிக்கப் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனக் காரணம் சொல்லப்படுகிறது.