கருத்தக்கார்... சொர்ண மசூரி... காய்கறிகள்! - அருட்தந்தையின் அற்புதச் சாகுபடி... | Organic farming and profitable yielding of Vegetables by Fr. Antony Anbuselvan near Tirunelveli - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

கருத்தக்கார்... சொர்ண மசூரி... காய்கறிகள்! - அருட்தந்தையின் அற்புதச் சாகுபடி...

மகசூல்

“இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமானால்... நாமே களமிறங்கினால்தான் சரிப்பட்டு வரும் என்று இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு அப்போதிலிருந்து இப்போது வரை இயற்கை விவசாய வழிகாட்டி ‘பசுமைவிகடன்’தான்” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, ‘அருட்தந்தை’ அந்தோணி அன்புச்செல்வன். வள்ளியூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கடம்பன் குளம். இக்கிராமத்துக்குள் நுழையும்போதே எதிர்ப்படுகிறது, ‘அன்பு இல்லம்’, ‘அமைதி இல்லம்’ ஆகிய ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள். அன்பு இல்லத்தில் இருந்த அருட்தந்தை அந்தோணி அன்புச்செல்வனைச் சந்தித்துப் பேசினோம்.

“தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிற இஞ்ஞாசியார்புரம்தான் எனக்குச் சொந்த ஊர். 1999-ம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டேன். அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டம் தோப்புவிளை, ராதாபுரம், இலங்குளம் ஆகிய ஊர்களில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு உட்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் பங்குத்தந்தையாகச் சேவை செய்து வந்தேன். கடந்த 3 ஆண்டுகளாக வள்ளியூர் பல்நோக்குச் சமூகச் சேவைச் சங்கத்தின் இயக்குநர் மற்றும் செயலராகப் பணியாற்றி வருகிறேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க