கடுதாசி: வெற்றி நிச்சயம்!

வாசகர்கள்

ம்மாழ்வார் விதைத்துச் சென்ற இயற்கை விவசாய விதைகள், இப்போது வளர்ந்து பலன் கொடுக்கத் தொடங்கிவிட்டன. அதைச் செம்மையாக ஆவணப்படுத்தி வருகிறது, பசுமை விகடன் இதழ்,

- கே.சிவசாமி, தலைவாசல்.

பொட்டல் காடாக இருந்த இடத்தை, அற்புதமான பண்ணையாக வடிவமைத்துள்ளார், நம்மாழ்வார். திருத்தணியில் உள்ள இந்தப் பண்ணைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

- எஸ்.மேகலா, சென்னை-5

விவசாயிகளுக்கு இடுபொருள்கள் செலவுதான் கையைக்கடிக்கிறது. செலவைக் குறைத்து, லாபகரமாக விவசாயம் செய்ய, பசுமை விகடனில் பலவிதமான தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த இதழில், பூச்சிக்கொல்லி செலவைக் குறைக்க, ‘பூச்சி’ செல்வம் சொல்லிய ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தன.

- க.தர்மலிங்கம், திருச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick