தண்டோரா

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

வெள்ளாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜனவரி 21-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 28-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 04142 290249.

இயற்கைப் பூச்சிவிரட்டி

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 28-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை ‘இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 04286 266345.

சுருள்பாசி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜனவரி 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘காடை மற்றும் முயல் வளர்ப்பு’, 29-ம் தேதி ‘அரசு விதிமுறைப்படி செம்மரங்கள் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல்’, 31-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick