அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏற்றுமதி

மிளகாய் + சிறுதானியங்களுக்குக் கூடும் ஏற்றுமதி வாய்ப்பு!

விவசாய விளைபொருள்களில் சிறந்த ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருள் மிளகாய் வற்றல்தான். இது வத்தல், வர மிளகாய், காய்ந்த மிளகாய் என வட்டார வழக்கில் பல பெயர்களில் அழைக்கப் படுகிறது. நீளம், உருண்டை, குட்டை, ஸ்பிரிங் என நான்கு வகைகளில் மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சனம், வொண்டர் ஆட், தேஜா, பயாத்ஜி, ரிங்கில்ஸ் என்ற பெயர்களில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 15-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் மூலம் இந்தியாவுக்கு அறிமுகமான மிளகாயின் பூர்வீகம் தென் அமெரிக்கா. உணவுக்கு நிறத்தையும், சுவையையும் கொடுப்பதில் முன்னணியில் இருப்பது மிளகாய்.

ஏற்றுமதிக்கான மிளகாயின் நீளம் 3-4 அங்குல(இன்ச்) அளவில் இருக்க வேண்டும். காம்புகளோடு இருக்கும் மிளகாய் மலேசியாவுக்கும், காம்புகளற்ற மிளகாய் சிங்கப்பூருக்கும் ஏற்றுமதி ஆகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick