ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - தக்காளி, மஞ்சளில் பூஞ்சணத் தாக்குதல்... அறிகுறியும் தீர்வும்!

கேள்வி-பதில்

ஜா புயலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதனால், மண்ணில் வளரக்கூடிய பூஞ்சணங்களால் நெல், தக்காளி, மஞ்சள் ஆகிய பயிர்களில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. நெல் பயிரில் ஏற்படும் நோய்கள் குறித்த கேள்விகளுக்குக் கடந்த இதழில் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் பதிலளித்திருந்தார். தக்காளி, மஞ்சள் ஆகிய பயிர்களில் ஏற்படும் நொய்த்தொற்றுக் குறித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...

தக்காளியில் என்னவிதமான பாதிப்புகள் ஏற்படும்?

பெரும்பாலும் தக்காளி நாற்றங்காலில்தான் அதிகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பருவநிலை மாற்றம் காரணமாக நாற்றங்காலில் ‘தண்டு கழுத்து அழுகல் நோய்’ ஏற்படும். இது மண்ணிலிருக்கும் ‘பித்தியம் அபானிடெர்மேட்டம்’ (Pythium Aphanidermatum) என்ற பூஞ்சணத்தால் வரக்கூடிய நோய். இந்நோய் தாக்கிய நாற்றுகளில், தரையை ஒட்டிய தண்டுப்பகுதியை (கழுத்துப் பகுதி) விரல்களால் நசுக்கிவிட்டது போல் காணப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick