மரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: வேலு

வேளாண்மைக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள், பொங்கல் விழா கொண்டாட வருவதாகச் சொல்லியிருந்ததால்... காலையிலேயே தோட்டத்துக்குக் கிளம்பினார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அவரோடு இணைந்துகொண்டார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. இருவரும் நடந்து கொண்டிருக்கும்போது, பண்பலை வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ‘கடவுள் என்னும் முதலாளி... கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி...’ எனும் பாடல் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.

முன்னரே தோட்டத்துக்கு வந்திருந்த ‘காய்கறி’ கண்ணம்மா, முற்றத்தைக் கழுவி, சாணம் மெழுகி, கோலம் போட்டு வைத்திருந்தார். ஏரோட்டி, மாடு, கன்றுகளைக் குளிப்பாட்டி பொட்டு வைத்துக்கொண்டிருந்த சமயத்தில், வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் வேனில் வந்து இறங்கினர்.

பரபரவென்று அலங்காரம் செய்து பொங்கல் வைத்து குலவையிட்டு அமர்க்களமாகக் கொண்டாடிவிட்டு, மாணவிகள் கிளம்பிய பிறகு, மூவரும் ஆசுவாசமாக அமர்ந்து பொங்கலைச் சுவைத்துக்கொண்டே மாநாட்டைக் கூட்டினர். ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், ஏரோட்டி.

“தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடியில் இருக்குற திருஆரூரான் சர்க்கரை ஆலை, விவசாயிகளோட பெயர்ல 300 கோடி ரூபாயை வங்கிகள்ல கடன் வாங்கியிருக்குறதா புகார் வாசிக்கிறாங்க, விவசாயிகள். ஆதனூரைச் சேர்ந்த கரும்பு விவசாயி மோகன்தாஸுக்கு, ‘நீங்க வாங்கியிருக்குற மூணு லட்சம் ரூபாய் கடன்ல 2,58,918 ரூபாய் நிலுவையில இருக்கு. உடனடியா வந்து கட்டுங்க’னு ‘பாபநாசம் ஸ்டேட் பேங்க்’ல இருந்து நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick