வருமானத்துக்கு வழிகாட்டும் மீன் வளர்ப்பு மாநாடு!

நாட்டு நடப்புஆறுச்சாமி

சென்னை மாநகரில், கடற்கரையை ஒட்டி எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ளது மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (Central Institute of Brackishwater Aquaculture-CIBA). இங்கு உவர் நீரில் மீன் வளர்ப்பு, இறால், நண்டு வளர்ப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிகளும் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இந்த நிலையத்தின் இயக்குநர் முனைவர் விஜயன், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது,

‘‘கடலோரங்களில் நன்னீரும் கடல் நீரும் சங்கமித்து உருவாகும் நீர்நிலைகள் மிகவும் வளமானவை. கடலில் உற்பத்தியாகும் சிலவகையான இறால்கள் மற்றும் மீன்களின் குஞ்சுகள் கடலிலிருந்து உவர்நீர் நிலைகளுக்குக் குடியேறி அங்கு வளர்ச்சியடைந்து மீண்டும் கடலுக்கு இனப்பெருக்கத்திற்குச் செல்லும்.

இவ்வகை இறால் மற்றும் மீன்களை உவர்நீர் குளங்களிலோ அல்லது கூண்டுகளிலோ வளர்ப்பதையே உவர்நீர் மீன் வளர்ப்பு என்கிறோம். இன்று நாட்டின் கடல் பொருள் ஏற்றுமதியில் 60% (சுமார் 32,000 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டும் தொழிலாக வளர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், முறையான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்தான். இதன்படி ஒரு ஹெக்டேரில், 100 நாள்களில் லட்ச கணக்கில் வருமானம் பெற முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick