பூச்சிகளைக் காப்போம் பூச்சிக்கொல்லிகளை ஒழிப்போம்! - விளைச்சலைக் கூட்டும் தேனீக்கள்...

சுற்றுச்சூழல்

கரந்தச்சேர்க்கையாளர்கள்’ என்று அழைக்கப்படும் பூச்சி இனங்கள்... தாவரங்களின் இனப்பெருக்கம், உணவு உற்பத்தி, பல்லுயிர்ப்பெருக்கம் போன்றவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தப்பூச்சிகளில் முக்கியமானவை தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவைதான். இவை பூக்களில் அமரும்போது அவற்றின் கால்களில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம்தான் உலகின் 90 சதவிகிதப் பூக்கும் தாவரங்களின் இனப் பெருக்கத்துக்கான உயிராதாரம். கிட்டத்தட்ட 75 சதவிகித உணவுப் பயிர்கள் இனப்பெருக்கத்துக்காக இப்பூச்சிகளைத்தான் நம்பியுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளாக இப்பூச்சியினங்கள் மிகப்பெரிய அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுதான் வேதனையான உண்மை. ‘உலகின் 40 சதவிகிதப் பூச்சியினங்கள் அழிந்துவிட்டன’ என முன்பே ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பூச்சிகளின் அழிவு, தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick