ஜல்லிக்கட்டு... உழவு... பால்... அனைத்துக்கும் ஏற்ற ஆலம்பாடி மாடுகள்!

பாரம்பர்யம்

‘அதிகப் பால், அதிக வருமானம்’ என்று ஆசை காட்டிய காரணத்தால்... நமது பொக்கிஷங்களான நாட்டு மாடுகளை ஒதுக்கிவிட்டு, வெளிநாட்டுப்பசுக்களையும் கலப்பினப்பசுக்களையும் வளர்க்க ஆரம்பித்தனர், விவசாயிகள். கொஞ்சமாகப் பால் கொடுத்தாலும் உழவு செய்ய, வண்டி இழுக்க, கமலை இறைக்க, விதைக்க எனப்பல வேலைகளுக்கு உதவி வந்தன, நாட்டு மாடுகள்.

முக்கியமாக மண்ணை வளப்படுத்துவதில் நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவற்றின் பங்கு அளவிட முடியாதது. கலப்பின மாடுகளின் வருகையால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறையக்குறைய விவசாயத்தில் ரசாயனப் பயன்பாடு அதிகரித்தது. உழவு உள்ளிட்ட வேலைகளுக்கு எந்திரங்கள் புகுத்தப்பட்டன. வெண்மைப்புரட்சி, பசுமைப்புரட்சி ஆகியவற்றால் கடனாளியான விவசாயிகள்தான் அதிகம்.

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், ‘ஜீரோபட்ஜெட் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் போன்றோரின் தொடர் பிரசாரத்தால் மீண்டும் பாரம்பர்ய முறை விவசாயத்துக்கு மாறி வருகிறார்கள், ஏராளமான விவசாயிகள். இப்படி இயற்கைக்கு மாறும் விவசாயிகள் பலர், இடுபொருள் தயாரிப்புக்காக நாட்டு மாடுகளைத் தேடி வாங்க ஆரம்பித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick