வாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்!

மதிப்புக்கூட்டல்

‘தங்களது விளைபொருள்களில் ஒரு பகுதியையாவது விவசாயிகள் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் நல்ல லாபம் ஈட்ட முடியும்’ என்று விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் காலங்காலமாகச் சொல்லி வருகிறார்கள். பல விவசாயிகள் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன். இவர், தான் விளைவிக்கும் வாழைப்பழங்களை மதிப்புக்கூட்டி, நல்ல லாபம் ஈட்டி வருகிறார். திருநெல்வேலி மாவட்ட வாழைச் சாகுபடி விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும், திருச்சி, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.

ராஜபாளையம் அருகில் உள்ள தளவாய்புரம் பகுதியில் உள்ள ஜெகதீசனின் வீட்டில் அவரைச் சந்தித்தோம். “தாத்தா காலத்துல இருந்தே டெக்ஸ்டைல் பிசினஸ் செஞ்சுட்டுருக்கோம். இதோட விவசாயமும் செஞ்சுட்டுருக்கோம். நான் தலையெடுத்த பிறகு... பிசினஸையும், விவசாயத்தையும்  கவனிச்சுக்க ஆரம்பிச்சேன். முன்னாடி நானும் ரசாயன உரங்களைப் போட்டுதான் விவசாயம் செஞ்சுட்டுருந்தேன். அதுல கட்டுபடியாகாததால் பாரம்பர்ய முறைக்குத் திரும்பிட்டேன். எட்டு வருஷமா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick