மேட்டுப்பாத்தி... சாண எரிவாயு... வயல்வெளிப் பள்ளி.. தன்னம்பிக்கை தரும் ‘தன்னிறைக் காணி!’

இயற்கை

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு காரணமாக... கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து ஐந்து இலக்கங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பல இளைஞர்கள் வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தில் கால் பதித்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் மணி அரசு.

இயற்கை விவசாயம் மேற்கொண்டு வரும் கார்த்திக் மணி அரசு, சுற்று வட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து... ‘மாதம் ஒரு மாலைப்பொழுது’ என்ற பெயரில் மாதந்தோறும் கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி இயற்கை குறித்துப் பரப்புரை செய்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், ராவணாபுரம் கிராமத்தில் இருக்கிறது, கார்த்திக் மணி அரசுவின் தோட்டம். தென்னை மரங்கள் சூழ்ந்த அழகிய பண்ணை வீட்டின் முகப்பில் சுவர் ஓர மேசையில் வீற்றிருக்கிறது, நம்மாழ்வாரின் பிரமாண்டமான ஆளுயர புகைப்படம். படத்தின் முன் பூக்கள் தூவப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick