உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

 இயற்கைக்கு மாறும் பிரேசில்!

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரத்தில் ‘ரியோ ரூரல்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 45,000 சிறு விவசாயக்குடும்பங்கள் பயன்பெற உள்ளன. இத்திட்டத்துக்கு உலக வங்கியும் நிதி அளிக்க முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, இயற்கைக் காய்கறிகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர். திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய முறைகள், விவசாயக் கழிவுகளை மேலாண்மை செய்யும் முறைகள் குறித்த பயிற்சிகளை அளித்து வருகிறது, அந்நாட்டு அரசு. இத்திட்டத்தின் மூலம், இயற்கை வளங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் எனச் சொல்கிறார்கள், அந்நாட்டு விஞ்ஞானிகள். இத்திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதற்காகத் தலா 7,000 டாலர் வழங்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick