குதித்து வந்த குட்டிக்குதிரை!

நாட்டு நடப்புஆறுச்சாமி

காராஷ்டிர மாநிலம் புனே மாநகரின், புறநகர் பகுதியில் அமைந்துள்ளது ‘ஜான் டியர் டிராக்டர்’ நிறுவனத்தின் தொழிற்சாலை. அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவில், டிராக்டர் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கியதன் 20-ம் ஆண்டுக் கொண்டாட்டாமும் 28 ஹெச்.பி திறன் கொண்ட சிறிய டிராக்டர் அறிமுக விழாவும் அண்மையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள பிரபல பத்திரிகைகளின் பத்திரிகையாளர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர்.

பனி பொழியும் புனேவில், அதிகாலை எழுந்து புழுதி பறக்கும் சாலையில் பயணத்து தொழிற்சாலைக்குச் சென்று சேர்ந்தோம். விவசாயிகளுக்கான பண்ணைக்கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் என்பதால், தொழிற்சாலை வளாகத்தைப் பசுமையாகவே வைத்திருந்தனர். பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கொண்டவுடன், டிராக்டர் தயாரிக்கும் அசம்பிளிங் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். சிறிய ஒற்றைக் கம்பியில், திருகாணிப் போட்டு திருகுவது தொடங்கும் டிராக்டர் தயாரிப்பு, நம் கண்முன்னே ஒவ்வொரு பாகங்களாக மாட்டி, கடைசியில் முழு டிராக்டராக உருமாறுவதைப் பார்த்தோம்.

அடுத்து, இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான டிராக்டர்களையும் காட்சிப்படுத்தி வைத்திருந்தனர். ஸ்மார்ட் போனில் உள்ள செயலி மூலம், டிராக்டர் உள்ள இடத்தை அறிந்து கொள்வது தொடங்கி, டிராக்டரில் எத்தனை லிட்டர் டீசல் உள்ளது, என்ன பழுது ஏற்பட்டுள்ளது... எனக் கண்காணிக்கும் வகையில் பல தொழில்நுட்பங்களைப் புகுத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick