பானைக்குப் பாரம்பர்ய அரிசி... படையலுக்கு அரசாணிக்காய்! - இது ஜீரோபட்ஜெட் பொங்கல்!

பாரம்பர்யம்

ற்சார்பு விவசாயிகள் பலரும் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான மஞ்சள், கரும்பு, அரிசி போன்ற விளைபொருள்களைத் தங்களது தோட்டத்திலேயே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். அந்த வகையில், பொங்கலுக்குத் தேவையான விளை பொருள்களோடு அரசாணிக்காயையும் தனது தோட்டத்தில் விளைவித்துச் சிறப்பாகப் பொங்கல் கொண்டாடி வருகிறார், ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன்.

“ஈரோட்டுல பசுமை விகடன் ஏற்பாடு செஞ்சுருந்த ‘ஜீரோபட்ஜெட்’ பயிற்சிதான் என்னை ரசாயன விவசாயத்துல இருந்து இயற்கை விவசாயத்துக்கு இழுத்துட்டு வந்தது. அதுக்கப்புறம்தான் வீரிய ரகங்களை ஒதுக்கிட்டு பாரம்பர்ய நெல் ரகங்களை விதைக்க ஆரம்பிச்சேன். இயற்கை இடுபொருள்களை நானே தயாரிச்சுக்கிறேன். அதுக்கானதை எல்லாம் நம்ம வயல்லயே கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணித் தற்சார்பு விவசாயியா மாறிட்டேன்” என்ற லோகநாதன் பொங்கல் விழா குறித்துப் பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick