தெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்!

பயிற்சி

“அதை ஞாபகப்படுத்தாதீங்க. தென்னந்தோப்புப் பக்கம் போனாலே நெஞ்சு பதறுது. முடிஞ்சவரைக்கும் தோப்புக்குப் போறதையே நாங்க தவிர்த்துக்கிட்டு இருக்கோம்”- கஜா புயலில் தென்னையை இழந்த விவசாயிகள் இப்படிதான் விரக்தியின் உச்சத்தில் முடங்கிக் கிடந்தார்கள். பல விவசாயிகள் செய்வதறியாமல் குழம்பி இருந்தார்கள்.

‘வார்த்தைகளால் மட்டும் விவசாயிகளை ஆற்றுப்படுத்த முடியாது. அவர்களைக் கரம்பிடித்து அழைத்து வந்து, இதயத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் வெளிச்சம் பாய்ச்சினால்தான் அவர்கள் மீண்டு வர முடியும்’ என முடிவு செய்தது, விகடன் குழுமம். தொடர்ந்து, கஜா புயலில் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கான சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது, ‘பசுமை விகடன்’.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலிருந்து மதுக்கூர் செல்லும் சாலையில் உள்ள ஆத்திக்கோட்டையில் பவானி என்ற தென்னை விவசாயியின் தோட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி மிகவும் எளிமையான முறையில் ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெருமழை கொட்டித் தீர்த்த போதிலும்... ‘திக்குத் தெரியாமல் தவிக்கும் தங்களுக்குக் கண்டிப்பாக ஏதேனும் துடுப்பு கிடைக்கும்’ என்ற நம்பிக்கையோடு நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick