தண்டோரா | Announcement - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

தண்டோரா

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

வான்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 18-ம் தேதி ‘வான்கோழி வளர்ப்பு’, 25-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

கால்நடைத் தீவனம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜூன் 18, 19-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணை அமைத்தல்’, 21-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 25-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 27-ம் தேதி ‘ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

காளான் வளர்ப்பு

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 13-ம் தேதி ‘சிறுதானியச் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்’, 20-ம் தேதி ‘சின்ன வெங்காயச் சாகுபடி’, 21-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 26-ம் தேதி ‘திலேப்பியா கெண்டை மீன் வளர்ப்பு’, 27-ம் தேதி ‘உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

கறவைமாடு வளர்ப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜூன் 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.

மீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூன் 13, 14-ம் தேதிகளில் ‘பழத்தோட்டங்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, 17, 18-ம் தேதிகளில் ‘தோட்டக்கலைக்கேற்ற கருவிகள்’, 19, 20-ம் தேதிகளில் ‘மதிப்பூட்டப்பட்ட பழப்பொருள்கள் தயாரித்தல்’, 25, 26-ம் தேதிகளில் ‘திலேப்பியா மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’, 26, 27-ம் தேதிகளில் ‘பசுந்தீவனச் சாகுபடியில் மண் மற்றும் பயிர் மேலாண்மை’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு,தொலைபேசி: 044 27452371

அதிகம் படித்தவை