பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்பு! - நஷ்டத்தைக் குறைக்க வயலை ‘வட்டமிடுங்கள்’... | Insects are our friends 2.0 - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்பு! - நஷ்டத்தைக் குறைக்க வயலை ‘வட்டமிடுங்கள்’...

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பூச்சி மேலாண்மை - 9

யிர் பராமரிப்பில் பூச்சி மற்றும் நோய்களைக் கண்காணிப்பது என்பது முக்கியமான பணி. ஒரு காலத்தில் வழக்கமான பணிகளோடு இணைந்தே இருந்தது, பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்புப் பணி. நவீன விவசாயத்தில் பழைய முறைகள் வழக்கொழிந்ததுபோல் கண்காணிப்பும் காணாமல் போய்விட்டது. முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்தவுடன் விவசாயியின் கால்கள், வயலை நோக்கித்தான் செல்லும். வயலைச் சுற்றிப் பார்க்கும்போது பயிரின் வளர்ச்சி, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் போன்றவை தெரியவரும். பயிரில் உள்ள பிரச்னைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கக்கூடிய தன்மையும் விவசாயிகளிடம் இருந்தது. நவீன விவசாயமும் கலாசாரமும் வயல் கண்காணிப்பைத் தள்ளி வைத்துவிட்டன. அதிகாலை வயலுக்குச் சென்று பயிர்களைப் பார்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. கண்காணிப்பு இருந்தால்தான் பயிரில் எதிர்பார்க்கும் மகசூலை எடுக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க