பாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி! - 2 ஏக்கர் 30 சென்ட்… ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் | Natrayan saying about Subhash Palekar Organic farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

பாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி! - 2 ஏக்கர் 30 சென்ட்… ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்

இயற்கை வேளாண்மை

“ஒருமுறை உழவு செய்து நிலத்தைத் தயார் செய்தால் போதும். அதன்பிறகு அறுவடை. அடுத்த நடவு. இது மட்டும்தான் வேலையாக இருக்க வேண்டும். அடிக்கடி உழவு செய்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல், களையெடுத்தல் என எந்த வேலையும் இருக்கக் கூடாது. பயிருக்குப் பாசனமும் ஜீவாமிர்தமுமே போதும். வேறு இயற்கை இடுபொருள்கள்கூடத் தேவையில்லை. இந்த முறையில்தான் கடந்த பத்து ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். செலவே இல்லாமல் ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் பார்த்து வருகிறேன். இதற்குக் காரணம் சுபாஷ் பாலேக்கரின் இயற்கை வேளாண்மை சித்தாந்தம்தான்” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார், நாட்ராயன்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள எரசப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர், நாட்ராயன். வேளாண்மை இணை இயக்குநராகப் பணியாற்றியவர். சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாய முறைகளால் ஈர்க்கப்பட்டவர். தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட நாட்ராயன், முழுநேர விவசாயியாக இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க