18 கறவை மாடுகள் மாதம் ரூ. 1,89,000 - பால், தயிர், பால்கோவா, பன்னீர்… | Profitable farming business - Dairy cattle - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

18 கறவை மாடுகள் மாதம் ரூ. 1,89,000 - பால், தயிர், பால்கோவா, பன்னீர்…

கால்நடை

விவசாயம் சார்ந்த உபதொழிலாகப் பெரும்பாலான விவசாயிகள் தேர்ந்தெடுப்பது, கறவை மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைப்பதைத்தான். அதே நேரத்தில், பால் பண்ணை வைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட விவசாயிகளும் பலர் உண்டு. இந்நிலையில், ‘தெளிவான புரிதலோடு பால் பண்ணைத் தொழிலில் இறங்கி, பால் விற்பனை மட்டுமில்லாமல், பாலில் மதிப்புக்கூட்டிய பொருள்களையும் உற்பத்தி செய்தால் நல்ல லாபம் எடுக்க முடியும்’ என்று நம்பிக்கையூட்டுகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது, சொக்கலிங்கபுரம் எனும் கிராமம். இங்குதான், கருப்பசாமியின் மாட்டுப்பண்ணை இருக்கிறது. மாடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த கருப்பசாமியிடம், நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க