கோதாவரி - காவிரி இணைப்பு “30 நாள்களுக்குத்தான் தண்ணீர் வரும்...” - உண்மையைச் சொல்லும் வல்லுநர்! | Godavari-Cauvery linking not feasible: PWD ex-chief engineer - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

கோதாவரி - காவிரி இணைப்பு “30 நாள்களுக்குத்தான் தண்ணீர் வரும்...” - உண்மையைச் சொல்லும் வல்லுநர்!

நீர் பாசனம்

டந்த மாதம் கோதாவரி-காவிரி இணைப்பால் தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தீரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வரும் தமிழக முதல்வர், கோதாவரி ஆற்றின் தண்ணீர் தமிழகத்திற்கு வரப்போகிறது. 60,000 கோடி ரூபாயில் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, பாலாறு வழியாகக் காவிரிக்கு ஆண்டுதோறும் 200 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்குத் தடையின்றிக் கிடைக்கும். தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சம் முழுவதும் தீர்ந்துவிடும் என்று நம்புகிறார். தமிழக மக்களையும் முதல்வர் நம்பச் சொல்கிறார். இதைப் பயன்படுத்திக்கொண்டு அரைவேக்காட்டு அரசியல்வாதிகளும், நன்கறியாத நீர் மேலாண்மை ஆர்வலர்களும் இந்தத் திட்டத்தைப் பெரிதும் வரவேற்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க