பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்... | 8 way green road near Salem Farmers continue to struggle - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

பிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...

தொடரும் விவசாயிகள் போராட்டம்!

சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்குத் தடை விதித்துச் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கடந்த ஜூன் 1-ம் தேதி டெல்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதனால், கோபம் அடைந்த சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வீடுகளிலும், வயல்களிலும் கறுப்புக் கொடியைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதோடு விவசாயிகள் வாயில் கறுப்புக் கொடியைக் கட்டிக்கொண்டு ஆங்காங்கே போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிகம் படித்தவை