சூழலியல்: மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோகார்பன் எமன்! | again hydrocarbon project Fear in farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)

சூழலியல்: மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோகார்பன் எமன்!

நெடுவாசல் பகுதி மக்களை நிம்மதி இழக்க வைத்திருந்த ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் முதல்கட்டமாக 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஹைட்ரோ கார்பன் என்று பொதுவான பெயரில் அழைக்கப்பட்டாலும், இது கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல் கேஸ் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான். நிலத்திலிருந்து இவற்றை எடுக்க விரும்பும் நிறுவனங்கள், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அனுமதி வாங்க வேண்டிய நிலை இருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு, அனைத்தையும் உள்ளடக்கிய ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒற்றை அனுமதிக் கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளது, மத்திய அரசு. இதனால்,   கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களில் போராட்டங்கள் வேகமெடுத்து வருகின்றன.