தண்டோரா | Announcement - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

தண்டோரா

பசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

கறவைமாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 5-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 12-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 19-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 04142 290249.

அரிசித் திருவிழா

வேலூர் மாவட்டம், ஆற்காடு (தக்காங்குளம்) பகுதியில் மார்ச் 3-ம் தேதி, பாரம்பர்ய அரிசித் திருவிழா நடைபெற உள்ளது. சித்த மருத்துவர் கு.சிவராமன், வி.ஐ.டி செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அனுமதி இலவசம்.

தொடர்புக்கு,

செல்போன்: 92451 14321.


நாட்டுக்கோழி வளர்ப்பு

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் பிப்ரவரி 27-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 04286 266345.

மதிப்புக்கூட்டுதல்

சென்னை அடுத்த கொடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் மார்ச் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பால் புரதம் செறிவூட்டப்பட்ட நூடுல்ஸ், நார்ச்சத்து நிறைந்த நூடுல்ஸ், சிறுதானிய ஐஸ்கீரிம் மற்றும் பழச்சாறு யோகர்ட் ஆகியவற்றைத் தயாரிப்பது தொடர்பான மூன்று நாள்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. பால் மதிப்புக்கூட்டுதல், பதனிடுதல் உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு,

மின்னஞ்சல்: istedtanuvas@gmail.com


தொலைபேசி: 044 27680214/15.

காளான் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மார்ச் 12-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 14-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 26-ம் தேதி ‘பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு’, 28-ம் தேதி, ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

செல்போன்: 77088 20505, 94885 75716.


கட்டணப் பயிற்சி

இயற்கை வேளாண்மை

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மார்ச் 2-ம் தேதி ‘இயற்கை வேளாண்மை’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close