பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்! | Insects are our friends 2.0 - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பூச்சி மேலாண்மை 2

பூச்சிகள் இல்லாமல் விவசாயம் சாத்தியமே இல்லை. பயிர்கள் அவற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்ளப் பூச்சிகளும் முக்கியக் காரணிகள்.

பூச்சிகள்மூலம் எதிர்ப்புத் திறனை உருவாக்கிக் கொள்ளும் செடிதான் தரமான செடி. அதிலிருந்துதான் விதைகளைச் சேமித்தனர், நம் முன்னோர். அதனால், வயலில் பூச்சிகளைக் கண்டவுடனே பயப்பட வேண்டிய அவசியமில்லை. வயலில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்குக் காரணம் பூச்சியா, நோயா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்குச் சளி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்துபவை வைரஸ்கள். வாந்தி, பேதி போன்றவற்றை ஏற்படுத்துபவை, பாக்டீரியாக்கள். சொரி, சிரங்கு, படை போன்றவற்றை ஏற்படுத்துபவை, பூஞ்சணங்கள். சுகாதாரமின்மையால் குடலில் புழுக்கள் உண்டாகின்றன. தாவரங்களில் நோய்களை உண்டாக்குபவையும் இவைதான். வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சணங்கள், நூற்புழுக்கள் போன்றவற்றால்தான் தாவரங்களுக்கு நோய்கள் வருகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close