பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்! | Profitable farming business - Poultry - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள்! - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

யற்கைச்சீற்றம், விலையின்மை, ஆள் பற்றாக்குறை... எனப்பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான்.

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு... என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன. நமது பண்ணை அமைந்திருக்கும் சூழல், இடவசதி, தண்ணீர் வசதி... போன்ற முக்கியமான காரணிகளை வைத்துச் சரியான பண்ணைத்தொழிலைத் தேர்ந்தெடுத்து ஈடுபட்டால், கண்டிப்பாக நல்ல லாபம் ஈட்ட முடியும்.

சொல்லப்போனால் இதுபோன்ற விவசாய உபதொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அதுபோன்ற பண்ணைத்தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வெற்றிச்சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் இத்தொடரின் நோக்கம்.

இந்த இதழில் நாட்டுக்கோழிகள் வளர்த்து நல்ல வருமானம் ஈட்டி வரும் நண்பர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் ஜெனில் கார்த்திக் ஆகியோரைப் பற்றிப் பார்ப்போம்.திருநெல்வேலி மாவட்டம், தென்காசி செல்லும் சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, ஆலங்குளம். இங்கிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாளையங்குறிச்சி எனும் கிராமத்தில்தான் கிருஷ்ணகுமார் மற்றும் ஜெனில் கார்த்திக் ஆகியோரின் நாட்டுக்கோழிப்பண்ணை இருக்கிறது.

நாம் வருவதை முன்கூட்டியே தெரிவித்திருந்ததால், பண்ணை அமைந்திருக்கும் இடத்தை (லொக்கேஷன்) ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பியிருந்தார். அதை வைத்து ‘கூகுள் மேப்’ உதவியுடன் பண்ணையை அடைந்தோம். கோழிக்குஞ்சுகள் வாங்க வந்திருந்த சிலரிடம் பேசிக் கொண்டிருந்தனர், கிருஷ்ணகுமார் மற்றும் ஜெனில் கார்த்திக் ஆகியோர்.

வேலையை முடித்துவிட்டு வந்த கிருஷ்ணகுமார், “எனக்குச் சொந்த ஊர் கோவில்பட்டி. சின்ன வயசுல இருந்தே எனக்குக் கோழி வளர்ப்புல ஆர்வம் அதிகம். ஒரு தனியார் கல்லூரியில ‘அசிஸ்டன்ட் புரொஃபச’ரா வேலை பார்த்துக்கிட்டுருந்தேன். கோழி வளர்ப்புல இருந்த ஆர்வத்தால அதுசம்பந்தமான வாட்ஸ்அப் குரூப், ஃபேஸ்புக் குரூப்கள்ல இணைஞ்சிருந்தேன். கோழி வளர்ப்பு சம்பந்தமா இன்டர்நெட் மூலமாவும், தெரிஞ்ச கோழிப்பண்ணை வெச்சுருக்கவங்க மூலமாவும் நிறையத் தகவல்களைத் திரட்டி வெச்சுருந்தேன். அந்தத்தகவல்களை அப்பப்போ கோழி வளர்ப்புச் சம்பந்தப்பட்ட குரூப்கள்ல போட்டு விடுவேன். ஏதாவது சந்தேகம் கேக்குறவங்களுக்கும் பதில் சொல்வேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close