தென்னை மரத்தூள் தட்டுகள்... பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்று! | Biodegradable plates from coconut trees - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

தென்னை மரத்தூள் தட்டுகள்... பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்று!

நாட்டுநடப்பு

ஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ‘இந்திய உணவுப் பதனீட்டுத் தொழில்நுட்பக்கழகம்’ சார்பாக... கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி, ‘தென்னை மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்’ தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில்... தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய தேசிய தென்னை வளர்ச்சி வாரியத் தலைவர் ராஜூ நாராயணஸ்வாமி, “கடந்த 2018-ஆம் ஆண்டு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ‘இரண்டாம் பசுமைப் புரட்சி’யின் முதன்மையான நோக்கம்... விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்துவது தான். மதிப்புக்கூட்டல் மூலமாகத்தான் வருவாயை அதிகரிக்க முடியும். தென்னையிலிருந்து 25 வகையான மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். விவசாயிகள் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்” என்றார்.

[X] Close

.

[X] Close