உலகம் சுற்றும் உழவு! | Agricultural news around the world - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

உலகம் சுற்றும் உழவு!

உலக உழவு

சிறு விவசாயிகளுக்குக் கைக்கொடுக்கும்  மைக்ரோசாஃப்ட்!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்மூலம் விவசாயத்தை மேம்படுத்தி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது, சீனா. இந்தத் தொழில்நுட்பம் மூலம் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் வானிலை மாற்றங்கள் பற்றி முன்கூட்டியே அறிய முடிவதால், பாதிப்புகளைக் குறைக்க முடியும். இத்தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த இருக்கிறது. இதற்காக மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வேளாண்மை அமைச்சகத்துடன் இணைந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் சிலருக்குத் தானியங்கிக் குரல் அழைப்புமூலம் பருத்திப் பயிருக்குப் பூச்சித் தாக்குதல் ஏற்படுமா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வைக்கிறார்கள்.

[X] Close

.

[X] Close