தமிழக பட்ஜெட்... விவசாயிகளை மகிழ்விக்குமா? | Tamil Nadu budget allocation for agriculture - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

தமிழக பட்ஜெட்... விவசாயிகளை மகிழ்விக்குமா?

பட்ஜெட்

மிழக அரசின் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை, கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிக்கையில்... ‘10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பயிர்க்கடன் வழங்கப்படும். 1,361 கோடி ரூபாயில் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படும்.

84 கோடி ரூபாய் மானிய உதவியுடன் 10 குதிரைத்திறன் அளவில் 2,000 சோலார் பம்ப்செட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்’ என்பவை உள்ளிட்ட ஏராளமான அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில்... விவசாயிகளின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகளைத் தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறதா என்பது குறித்து விவசாயிகள் சங்கத்தலைவர்கள் சிலர் கூறிய கருத்துகள் இங்கே...

வீரசேனன், தஞ்சாவூர் மாவட்ட வேளாண் ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் மற்றும் நசுவினி ஆற்றுப்படுகை விவசாயிகள் சங்கத் தலைவர்: “குடிமராமத்துப் பணிக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது இத்திட்டத்தை விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நேர்மையான முறையில் செயல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டுகளில் இப்பணிகள் சரியாக நடைபெறாததால்தான், பாசனத்துக்குத் தண்ணீர் வந்து சேரவில்லை.

[X] Close

.

[X] Close