தினமும் கீரைகள்... வாரத்துக்கு 3 நாள்கள் காய்கறிகள்! | Organic farming Home garden in Chennai - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

தினமும் கீரைகள்... வாரத்துக்கு 3 நாள்கள் காய்கறிகள்!

மாடித்தோட்டம்

விவசாயத்தின் மீது ஆசை கொண்டுள்ளவர்களுக்கு, அந்த ஆசையைத் தீர்த்து வைப்பது மாடித்தோட்டம்தான். அப்படி விவசாய ஆசையால் மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருபவர்களில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் ராஜ். இவரின் வீட்டில் பழைய டப்பா, தண்ணீர் கேன்கள், வாளி... என அனைத்திலும் பூச்செடிகள் முளைத்திருக்கின்றன. ஒரு காலை நேரத்தில் செடிகளைப் பராமரித்துக் கொண்டிருந்த பாஸ்கர் ராஜைச் சந்தித்தோம்.

“ஒரு நாள்கூட இந்தச் செடிகளைப் பார்க்காம என்னால் இருக்க முடியாது. அந்தளவுக்குச் செடிகள் மேல எனக்குக் காதல். குழந்தைகளைப் பராமரிக்கிறது மாதிரி இந்தச்செடிகளைப் பராமரிச்சுட்டுருக்கேன். செடிகளை வளர்க்க ஆரம்பிச்சு நாலு வருஷமாச்சு. ஆரம்பத்துல 5 செடிகள்தான் இருந்துச்சு. இப்போ 150 செடிகள் இருக்கு. மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரைனு வளர்க்குறேன்.

[X] Close

.

[X] Close