2 ஏக்கர்... ரூ. 1,00,000 லாபம்... விதைநெல் கொடுக்கும் உற்சாக வருமானம்! | Profitable traditional rice varieties cultivation - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

2 ஏக்கர்... ரூ. 1,00,000 லாபம்... விதைநெல் கொடுக்கும் உற்சாக வருமானம்!

மகசூல்

‘ஆடு அவ்வருஷம்... மாடு மறு வருஷம்!’ என்று கிராமங்களில் ஒரு சொல்லாடல் உண்டு. ‘ஓர் ஆட்டை வாங்கி வந்தால், அந்த ஆண்டே அதன் மூலம் குட்டிகள் கிடைக்கும். ஆனால், மாட்டை வாங்கிவந்தால்  அடுத்த ஆண்டுதான் கன்று கிடைக்கும்’ என்பது இதற்கு அர்த்தம். பொதுவாக, ஆடுகளைக் கிடையடைத்து உடனடியாக உழுது விவசாயத்தைத் தொடங்குவர்.

ஆனால், மாட்டுச்சாணத்தைச் சேகரித்து மட்க வைத்துதான் பயன்படுத்துவார்கள். அதைக்குறிக்கும் வகையிலும் கிராமங்களில் மேற்கண்டச் சொல்லாடல் சொல்லப் படுகிறது. ஆனால், கால்நடை வளர்ப்பு குறைந்து... ரசாயன உரப்பயன்பாடு அதிகரித்திருப்பதால், கிடையடைக்கும் வழக்கமும் குறைந்துவிட்டது. ஆனாலும், பல விவசாயிகள் ஒவ்வொரு போகம் முடிந்த பிறகும் கிடையடைப்பதை வழக்கமாக வைத்து நிலத்தை வளப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, கிடையடைத்து பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். அதன்மூலம் நல்ல மகசூலும் எடுத்து வருகிறார்.

ஒரு பகல்பொழுதில், நெல்லைக் காயவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முத்துலட்சுமியைச் சந்தித்தோம். மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேசினார், முத்துலட்சுமி.

[X] Close

.

[X] Close