அரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,00,000 லாபம்! - பலபயிர்ச் சாகுபடியில் பலமான வருமானம்! | Profitable Multicrop cultivation in Viluppuram - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/02/2019)

அரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,00,000 லாபம்! - பலபயிர்ச் சாகுபடியில் பலமான வருமானம்!

மகசூல்

‘குறைவான பரப்பில் விவசாயம் செய்தாலும் பலவிதப் பயிர்களைச் சாகுபடி செய்தால்தான் மண்ணின் வளம் குறையாமல் வெற்றிகரமாக விவசாயம் செய்ய முடியும்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் போன்றோர் தங்களது பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி சொல்வார்கள்.

அப்படிப் பலபயிர் சாகுபடி மேற்கொண்டு நல்ல வருமானம் எடுக்கும் விவசாயிகள் பலர் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வம். மைலம் அடுத்தக் கொண்டலங்குப்பம் எனும் கிராமத்தில் இருக்கிறது, வெற்றிச்செல்வத்தின் தோட்டம். வாழைத்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த வெற்றிச்செல்வத்தைச் சந்தித்தோம்.

“எங்க அப்பா விவசாயம்தான் செஞ்சாங்க. அதனால, சின்ன வயசுல இருந்தே நானும் விவசாய வேலைகளைப் பழகிட்டேன். ஆனா, அப்பாவால் லாபகரமா விவசாயம் செய்ய முடியலை. அதனால, எங்களை விவசாயத்துப்பக்கம் வரவிடலை. நான், எம்.பி.ஏ படிச்சுட்டு தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்குப் போய்ட்டேன். அங்க ஒரு பண்ணையில் ‘ஃபார்ம் மேனேஜ’ரா வேலை செஞ்சேன். அங்க முழுக்க ரசாயன விவசாயம்தான். அந்த வேலையில இருக்க முடியாம இந்தியா திரும்பிட்டேன். இங்க எங்களோட பூர்வீக நிலம் ரெண்டரை ஏக்கர்ல இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்தேன்.

[X] Close

.

[X] Close