தண்டோரா | Announcement - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

தண்டோரா

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு


சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 7, 8 ஆகிய தேதிகளில் ‘கால்நடைத் தீவன வளர்ப்பு’, 14, 15 ஆகிய தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 21, 22 ஆகிய தேதிகளில் ‘கறவை மாடு வளர்ப்பு’, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

காடை வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 29-ம் தேதி ‘காடை வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

பண்ணைக் கருவிகள்


காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 29, 30-ம் தேதிகளில் ‘கால்நடை மற்றும் மீன் பண்ணைகளுக்கேற்ற கருவிகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

சுருள்பாசி வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 30-ம் தேதி ‘மானாவாரி பயிர் சாகுபடித் தொழில்நுட்பங்கள்’, மே 7-ம் தேதி ‘காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 9-ம் தேதி ‘ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் கால்நடைத்தீவனம் தயாரித்தல்’, 14-ம் தேதி ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு’, 16-ம் தேதி ‘மாடித்தோட்டம் மற்றும் மூலிகை வளர்ப்பு’, 21-ம் தேதி ‘ஒருங்கிணைந்த நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’, 28-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716.

பயிர் மேலாண்மை

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 30-ம் தேதி ‘எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.