வங்கதேசத்தை ஏமாற்றிய பி.டி கத்திரி! | Bt brinjal: Bangladesh's model not fit enough for adoption - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

வங்கதேசத்தை ஏமாற்றிய பி.டி கத்திரி!

சூழல்

தெற்கு ஆசியாவிலேயே வங்கதேசத்தில் தான் முதன்முதலாக மரபணு மாற்றப்பட்ட பி.டி கத்திரி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும், மகசூலை இரட்டிப்பாக்கும் எனச் சொல்லி வங்கதேச அரசு அறிமுகம் செய்தது. இதை நம்பி விவசாயிகள் முன்வந்து விரும்பிப் பயிர் செய்தனர். அப்போது மரபணு விதைக்கு எதிராகக் கண்டனக் குரல்களும் எழுந்தன. ஆனால், இப்போது வங்கதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மரபணு மாற்றப்பட்ட பி.டி கத்திரி பயிரிட்ட நான்கு பேரில் மூன்று பேர் நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வங்கதேசத்தில் இயங்கிவரும் யு.பி.ஐ.என்.ஜி அமைப்பு பி.டி விவசாயிகளைச் சந்தித்து நடத்திய ஆய்வில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.