எட்டுவழிச் சாலை தீர்ப்பு... ஆனந்தத்தில் விவசாயிகள்! | Farmers in happiness for eight way road judgement - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

எட்டுவழிச் சாலை தீர்ப்பு... ஆனந்தத்தில் விவசாயிகள்!

நாட்டு நடப்பு

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம் கடந்த 25.2.2018-ம் தேதி மத்திய அரசால் 10,000 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இச்சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டம் வழியாக 277 கி.மீ தொலைவு போடப்பட இருந்தது. இச்சாலைத் திட்டத்தை அறிவித்த உடனே தமிழக அரசு, நிலங்கள் கையகப்படுத்த தீவிர முனைப்பு காட்டி வந்தது. இதையடுத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.