நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என்ன? | Nendran Banana Deflation What is the solution? - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/05/2019)

நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி... தீர்வு என்ன?

பிரச்னை

நேந்திரன் வாழையைச் சாகுபடி செய்த விவசாயிகள், பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, நேந்திரன் தார்களின் கொள்முதல் விலை, கடுமையாகச் சரிந்துள்ளது. உற்பத்தி செலவுகளுக்குக்கூடக் கட்டுப்படி ஆகாது என்பதால், முதிர்ச்சி அடைந்த தார்களை அறுவடை செய்யாமல் பல விவசாயிகள் அப்படியே தோட்டத்தில் விட்டிருக்கிறார்கள். நஷ்டத்திலிருந்து மீட்கத் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்கள், வாழை விவசாயிகள்.