நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

விக்னேஷ் சி செல்வராஜ் - ஓவியங்கள்: ஹரன்

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

“ஆடித் தள்ளுபடியில் வாங்க ஆதார் கார்டு தர வேண்டியதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!”

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

“ ‘ஃபேஸ்புக் ஆடித் தள்ளுபடி’ன்னு டைம்லைன்ல காட்டுச்சு... அதுக்கப்புறம் பார்த்தா...”

“என்னாச்சு..?”

“விழுந்த லைக்ல 25% காணாமப் போச்சு.”

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

“4ஜி வந்ததும் 3ஜி-யை 2ஜி ஸ்பீடுல கொடுக்குறீங்களே பாஸ்...”

“இதுதான் ஆடித் தள்ளுபடி ஆஃபர். மூணுல ஒரு பங்கு தள்ளுபடி!”

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

“ஜாமீன் கேட்ட குற்றவாளியை ஜட்ஜ் கோபமா ஜெயிலுக்கு அனுப்பிட்டார்...”

“ஏன், என்னாச்சு..?”

“ஆடித் தள்ளுபடியில என் மேல இருக்குற கேஸையும் தள்ளுபடி பண்ணலாமேன்னு கேட்டிருக்கார்!”

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

“ஆடித் தள்ளுபடி விளம்பரத்துல நடிச்சதுக்காக சம்பளத்துலயும் தள்ளுபடி பண்றதெல்லாம் நல்லாயில்ல சார்..!”

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

“தள்ளுபடியில் கிடைக்குதேன்னு வேட்டி வாங்கினேன்... ஒருவாட்டி துவைச்சதும் இப்படி ஆகிடுச்சு..!”

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

“தியேட்டர்களில் பாப்கார்னுக்கு 10% ஆடித் தள்ளுபடி வாங்கித்தரும் அணிக்கு ஆதரவு கொடுப்போம்..!”

ஆடித் தள்ளுபடி அட்டகாசங்கள்!

“ஏன், உன் வீட்டுக்காரர் ரிமோட்டை கையிலேயே வெச்சுட்டு இருக்கார்..?”

“சீரியல் முடிஞ்சதும் ஆடித் தள்ளுபடி விளம்பரம் போடுறதுக்குள்ள வேற சேனலுக்கு மாத்தத்தான்..!”