நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நீரிழிவு பாதிப்பு... மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

நீரிழிவு பாதிப்பு... மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
நீரிழிவு பாதிப்பு... மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

கேள்வி பதில்

நீரிழிவு பாதிப்பு... மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். எனக்கு மெடிக்ளெய்ம் இன்ஷுரன்ஸ் பாலிசி கிடைக்குமா?

நீரிழிவு பாதிப்பு... மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?எஸ்.வி.மாரியப்பன், மதுரை.

எஸ். ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் நிபுணர்

“நீங்கள் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பதாகக் கூறியிருக் கிறீர்கள். ஆகவே, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்காகவே ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பிரத்யேக பாலிசிகளை வழங்கி வருகின்றன. இதற்கான பிரீமியம் சாதாரண பாலிசிகளுக்கான பிரீமியத்தைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும். ஆகவே, இத்தகைய பாலிசியைத் தேர்ந்தெடுப்பதே உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’’. 
 
சிங்கிள் பிரீமியம் இன்ஷூரன்ஸ் பாலிசியின் முதிர்வுத் தொகைக்கு வரி விதிப்பு எப்படி?

பிரேம்குமார், கோபி

நீரிழிவு பாதிப்பு... மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

எஸ்.பிரபு, ஆடிட்டர்

“பிரிவு 10 (10D)-ன்படி,  31.3.2012-க்குமுன் சிங்கிள் பிரீமியம் செலுத்தியிருந்தால், அந்த பிரீமியத்துக்குக் காப்பீட்டுத் தொகையைவிட 20 சதவிகிதத்துக்கு அதிகமாகப் பணம் செலுத்தியிருந்தால், கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு, காப்பீட்டுத் தொகை 1,000 ரூபாய் எனில், அதிகபட்சம் பிரீமியம் தொகை 200 ரூபாய்க்குள்தான் செலுத்தியிருக்க வேண்டும். பிரீமியம் தொகை 20 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய முதிர்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். பிரீமியமானது 20 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால் வரி கிடையாது.

இதுவே 31.3.2012-க்குப் பிறகு காப்பீட்டுத் தொகையில் பிரீமியமானது 10 சதவிகிதத்துக்கு அதிகமாகச் செலுத்தியிருந்தால், கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டும். காப்பீட்டுத் தொகை 1,000 ரூபாய் எனில், அதிகபட்சம் பிரீமியம் தொகை 100 ரூபாய்க்குள் இருந்தால் வரி கிடையாது.”
 
என் பக்கத்து மனைக்காரர் வீடு கட்டும்போது என் இடத்திலிருந்து நீளவாக்கில் இரண்டு அடி எடுத்திருக்கிறார். அதற்கான பணத்தைத் தந்துவிடுவதாக சொல்கிறார் அவர். இதைப் பத்திரத்தில் எப்படி மாற்றி எழுதுவது?

நீரிழிவு பாதிப்பு... மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?வி.வி.மகேஷ் மூர்த்தி, சேலம்


ஆறுமுக நயினார், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர்

“உங்களது சொத்தில் உங்களுக்குத் தெரியாமல் ஒருவர் கைவைத்திருக்கும் போது அவர் மீது நீங்கள் நில அபகரிப்பு (Land Grabbing) மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டு (Criminal Trespass) பிரிவுகளின் கீழ் குற்றப்புகார் தாக்கல் செய்து, எஃப்.ஐ.ஆர் போட்டிருக்க வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறை. இருப்பினும், தாங்கள் அவரோடு சமரசம் செய்துகொள்ள விரும்புவதால், அவர் ஆக்கிரமித்த பகுதியை அளந்து கொண்டு எல்லைகள் குறித்து அந்தப் பகுதிக்கு ஒரு கிரயப்பத்திரம் எழுதி, கிரயத் தொகை பெற்றபின், அதை உரிய சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, முறைப்படி கைமாற்றிக் கொடுப்பதே சரியான தீர்வாகும்”.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஈக்விட்டி, அரசாங்க பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் என மூன்று முக்கியமான திட்டங்கள் இருக்கின்றன. இதில் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது?


நீரிழிவு பாதிப்பு... மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா?

மோகன், திருப்பூர்

வெ.சங்கர், செபி சான்றிதழ் பெற்ற நிதி ஆலோசகர்

“பொதுவாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தைப் பொறுத்தவரை, ஈக்விட்டியில் 50%, அரசுப் பத்திரங்கள் 25%, கார்ப்பரேட் பத்திரங்கள் 25% என முதலீடு மேற்கொள்ளப்படும். இல்லையெனில் முழுவதுமே கார்ப்பரேட் பத்திரங்கள் அல்லது முழுவதுமே அரசுப் பத்திரங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும். இதில் ஈக்விட்டி என்பது அதிக ரிஸ்க் கொண்டது. இதனையடுத்து கார்ப்பரேட் மற்றும் அரசுப் பத்திரங்களில் ரிஸ்க்கானது அதிகமாக இருக்கும். இந்த ரிஸ்க்குக்குத் தகுந்தமாதிரி  வருமானம் வரும். கடந்த ஐந்து ஆண்டுகளில்  டயர் 1 என்.பி.எஸ் கணக்கில், ஈக்விட்டியில் 13.5%, அரசுப் பத்திரங்களில் 10.5%, கார்ப்பரேட் பத்திரங்களில் 10% வருமானம் ஆண்டுக்குக் கிடைத்துள்ளது.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தைப் பொறுத்தவரை, எந்த விகிதத்தில் முதலீடு செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை எனில், ஆட்டோ இன்வெஸ்மென்ட் சாய்ஸ் என ஒரு வசதி உள்ளது. இதில் உங்களுடைய வயதுக்குத் தகுந்தாற்போல் முதலீடுகளை எளிதாக மேற்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, உங்களுடைய வயது 30 எனில், 100-லிருந்து 30-யைக் கழித்தால் 70. இந்த 70-ஐ ஈக்விட்டியில் முதலீடு மேற்கொள்ளலாம். மீதி 30-ஐ மற்ற இரண்டு பத்திரங்களிலும் பிரித்து முதலீடு மேற்கொள்ளலாம். வயது அதிகமாக அதிகமாக ஈக்விட்டி முதலீட்டைக் குறைத்துக் கொள்ளும் ஆட்டோமேட்டிக் வசதி இதில் உள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.500, அதிகபட்சம் எவ்வளவு வேண்டு மானாலும் முதலீட்டை மேற்கொள்ளலாம்.”

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்


படம்: ப.பிரியங்கா  

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.