நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மேட்ரிமோனி டாட் காம்... வந்தாச்சு ஐ.பி.ஓ!

மேட்ரிமோனி டாட் காம்... வந்தாச்சு ஐ.பி.ஓ!
பிரீமியம் ஸ்டோரி
News
மேட்ரிமோனி டாட் காம்... வந்தாச்சு ஐ.பி.ஓ!

மேட்ரிமோனி டாட் காம்... வந்தாச்சு ஐ.பி.ஓ!

தோ, அதோ எனக் கடந்த பல மாதங்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மேட்ரிமோனி டாட் காம், செப்டம்பர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிடுகிறது. ஒரு பங்கின் விலை ரூ.983 முதல் ரூ.985 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் சில்லறை விற்பனை மற்றும் பணியாளர்களுக்கு ஒதுக்கப் பட்ட பங்குகளிலிருந்து ஒவ்வொரு பங்குக்கும் ரூ.98 தள்ளுபடி அளிக்கப்படுகிறது. குறைந்தபட்ச பங்கு ஒதுக்கீடு 15 பங்குகளாகவும், அதற்கு மேல் 15 பங்குகளின் கூட்டுத்தொகையாகவும் வழங்கப் பட உள்ளது. 

மேட்ரிமோனி டாட் காம்... வந்தாச்சு ஐ.பி.ஓ!

இதனையொட்டி பாரத் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர் முருகவேல் ஜானகி ராமனைச் சந்தித்துப் பேசினோம். ``ஒரு நிறுவனம் ஐ.பி.ஓ வருகிறது எனில், அந்த நிறுவனத்துக்கு லாபம், வளர்ச்சி உள்பட பல விஷயங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே அதைச் செய்ய  முடியும். நாங்கள் மேட்ரிமோனி டாட் காம் நிறுவனத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவே இப்போது ஐ.பி.ஓ வருகிறோம். 

ஐ.பி.ஓ வெளியிடுவதன் மூலம் ரூ.130 கோடி  திரட்டவுள்ளோம். இந்த நிதி மூலம், ரூ.40 கோடி செலவில் சென்னை ஓ.எம்.ஆரில் எங்கள் நிறுவனத்துக்கு ஓர் அலுவலகத்தைக் கட்ட உள்ளோம். 40 கோடி ரூபாய்க்கு, வங்கியில் ஓவர் டிராஃப்ட் இருக்கிறது. மீதமுள்ள தொகையில் அதைச் செலுத்த உள்ளோம். மேலும், ரூ.20 கோடியை மார்க்கெட்டிங் செலவுக்காகவும், மீதிப் பணத்தைப் பொதுவான விஷயங்களுக் காகவும் செலவிட இருக்கிறோம். இந்த ஐ.பி.ஓ.வை, பி.எஸ்.இ, என்.எஸ்.இ என இரு பங்குச் சந்தைகளிலும் வெளியிடவிருக்கிறோம்.

ஆன்லைனில் வரன் தேடுபவர்கள் பதிவு செய்ய, ஆரம்பத்தில் ஆண்டுக்கு ரூ.300 எனக் கட்டணம் இருந்தது. இப்போது மூன்று மாதங்களுக்கு ரூ.4,200 என மாற்றியிருக்கிறோம். இதை ஆண்டுக்கு 5% என்கிற அளவில் அதிகரித்து வருகிறோம். சென்ற ஆண்டில் மட்டும் ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் மேட்ரிமோனி டாட் காமில் பணம் கட்டிப் பதிவுசெய்துள்ளனர். சென்ற ஆண்டில் எங்கள் நிறுவனத்தின் வருவாய் ரூ.292 கோடி’’ என்றார் முருகவேல் ஜானகிராமன்.

- சோ.கார்த்திகேயன் 

படம்: வீ.நாகமணி